சிந்திப்பதற்கு சில! - 1
1. முதலில் உன்னை புறக்கணிப்பார்கள், பின் உன்னை எள்ளி நகைப்பார்கள், பின் உன்னிடம் சண்டையிடுவார்கள், பின் நீ வெல்வாய் !!!
---- யாரோ
2. வாழ்க்கையை பின் நோக்கித் தான் புரிந்து கொள்ள முடியும், ஆனால் அதை முன் நோக்கியே வாழ வேண்டும் !!
--- யாரோ
3. நம்மில் வெளியே கடவுளை காண்பது சாத்தியமில்லை. நம் ஆன்மாக்களே, புறத்தில் காணப்படும் கடவுள்தன்மைக்கு ஊற்றாக விளங்குகின்றன. நாமே தலைசிறந்த கோயில் !!! அதன் திருவுருவப்படுத்துதல் என்பது நம் அகத்தில் நாம் காண்பதின் ஒரு மிக மெல்லிய நகலே !!!
--- சுவாமி விவேகானந்தர்
4. உங்களுக்கு புலப்படும் மொத்த ஒளியின் விளிம்பில் நின்று, அறிந்திராக் கருவெளியில் நீங்கள் அடியெடுத்து வைக்கத் தலைப்படும் நேரம், திடமான தரை முன் இருக்கிறது (அல்லது) பறக்க கற்றுத் தரப்படுவோம் என்று அறிவதே நம்பிக்கை எனப்படுவதாம்.
--- பார்பரா வின்டர்
5. நாம் செய்ய அச்சப்படும் விஷயங்களை செயல்படுத்துவதை, வாழ்நாள் முழுதும், ஒரு பழக்கமாக மேற்கொள்வதே வெற்றியின் திறவுகோல் !!!
--- டிரேசி
6. கல்வி என்பது போற்றுதலுக்குரியதே. அதே நேரத்தில், தெரிந்து கொள்ள அவசியமான விஷயங்களை கற்றுத்தர இயலாது என்பதை அவ்வப்பொழுது நினைவு கூர்வதும் மிக அவசியமே !!
--- ஆஸ்கார் வைல்ட்
7. இறுதியில் கணக்கில் கொள்ளப்படுபவை, உங்கள் வாழ்வின் வருடங்கள் அல்ல, வருடங்களில் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையே!!! --- ஆப்ரஹாம் லின்கன்
8. நமக்கு முன் இருப்பதும் பின் இருப்பதும் மிக மிகச் சிறியவை, நம்முள் இருப்பதைக் காட்டிலும் !!! --- எமெர்ஸன்
9. மக்கள் மலைகளின் உயரங்களையும், கடலின் பேரலைகளையும், நதிகளின் நீண்ட பாதைகளையும், நட்சத்திரங்களின் விநோத நகர்வுகளையும் கண்டு அதிசயிக்க அதிக தூரம் கடக்கிறார்கள். ஆனால், அதிசயிக்காமலேயே தங்களை கடந்து விடுகிறார்கள்!!!
--- அகஸ்டின்
10. மனப்பிறழ்வு என்பது, ஒரே காரியத்தை ஒரே மாதிரி செய்து, அதற்கு வித்தியாசமான முடிவுகளை எதிர்பார்ப்பதே !!!
--- ஐன்ஸ்டைன்
11. ஒரு விடயம் குறித்த உணர்வுகளும், அது குறித்த புரிதலும் ஒன்றுக்கொன்று எதிர்மறையானவை !!!
--- ரஸ்ஸல்
7 மறுமொழிகள்:
hi bala , how r u ..didnt visit to my blog for a long time ..it seems!!
hi bala , how r u ..didnt visit to my blog for a long time (at least yesterday and today) ..it seems!!
பாலா - 1-ஐச் சொன்னது மஹாத்மா காந்தி. இதை மிக அருமையாக ரெட் ஹாட் லினக்ஸ் தன்னுடைய மார்க்கெட்டிங் உத்தியாகப் பயன்படுத்துகிறது. சென்ற வருடம் ரெட் ஹாட்டின் பிரசிடெண்ட் இங்கே பேசும்பொழுது முதல் ஸ்லைடில் காந்தி படத்தைப் போட்டு இந்த வாக்கியத்தைத்தான் போட்டிருந்தார். இப்பொழுதும் இதை அவர்கள் தளத்தில் பார்க்கலாம்
http://www.redhat.com/truthhappens/
(வலது பத்தியைப் பார்க்கவும்)
நன்மொழிகள்! இந்தப் பொன்மொழிகள்
'1' says, you are about to continue! good work.
----
hi பெனாத்தல் , how r u ..didnt visit to my blog for a long time (at least today, yesterday and daybefore) ..it seems!!!
- ஞானபீடம்
VM,
Fine ! Bit busy, will visit your blog during this weekend and check your posts !!!
BTW, did you see my response for your comment in my post
http://balaji_ammu.blogspot.com/2005/07/i-birthday-flashback.html
?????
Suresh, Agent 8860336 ஞானபீடம்,
nanRi !!!! samma nakkalpA ongka reNdu pErukkum :)
Venkat,
Thanks for the info. I checked up at REDHAT.COM !!!!
என்க்கு மிகவும் பிடித்த பொன்மொழி ::
கடலில் நீ எத்தனை புயல்களை சந்தித்தாய் என்பதை பற்றி உலகுக்கு அக்கறையில்லை... கப்பலை கரை சேர்த்தாயா என்பதை மட்டும் சொல்...
Post a Comment